2022 - ஆரோக்கியம்

Friday 3 June 2022

தலை முடி பிரச்சினைகளை தடுக்க உதவும் வெங்காய எண்ணெய் !!

June 03, 2022 0
தலை முடி பிரச்சினைகளை தடுக்க உதவும் வெங்காய எண்ணெய் !!

 தலை முடி பிரச்சினைகளை தடுக்க வேண்டுமென்றால் அதற்கு மிக சிறந்த எண்ணெய் அவசியம் தேவை.

இதை தேர்வு செய்ய அதில் உள்ள ஊட்டச்சத்துக்களே போதும்.


வெங்காய எண்ணெய்யில் வைட்டமின் சி, எ, ஈ, பி போன்றவை நிறைந்துள்ளன. அத்துடன் இது சிறந்த நிருமி நாசினியாகவும் செயல்படும்.

தேங்காய் எண்ணெய் 250 மி.லி., வெங்காயம் 3, கறிவேப்பில்லை 1 கப், ஆமணக்கு எண்ணெய், ஆலிவ் எண்ணெய்.

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். எண்ணெய் காய்ந்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொண்டு வதக்கவும். பின் இவற்றுடன் கருவேப்பில்லை இலைகளையும் சேர்த்து வதக்கவும்.

10 நிமிடம் கழித்து இவற்றுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு இதனை ஆறவிட்டு வடிக்கட்டி கொண்டு தலைக்கு பயன்படுத்தலாம். வாரத்திற்கு 2-3 முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் நல்ல பலனை அடையாளம்.

வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தினால் தலை முடி உதிர்வை தடுத்து விடலாம். இதற்கு வாரத்திற்கு 2 முறை வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தாலே போதும். இது நேரடியாக முடியின் வேரை குணப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும்.

Friday 27 May 2022

எலும்புகள் பலம்பெற உதவும் கொய்யாப்பழம் !!

May 27, 2022 0
எலும்புகள் பலம்பெற உதவும் கொய்யாப்பழம் !!

 வைட்டமின் பி, மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப் பழத்தில் அடங்கியுள்ளன.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.


வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

கொய்யாப் பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

Wednesday 30 March 2022

தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடம்.” சூரிய ஒளியில் நில்லுங்க”. இந்தப் 15 நன்மைகளும் கிடைக்கும்..!

March 30, 2022 0
தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடம்.” சூரிய ஒளியில் நில்லுங்க”. இந்தப் 15 நன்மைகளும் கிடைக்கும்..!

 

தினசரி காலையில் நாம் சூரிய ஒளியில் நிற்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று மன அழுத்தத்தை குறைக்க அனைவரையும் இயற்கையை ரசிக்க எடுத்தரைக்கிறது. நீர்வீழ்ச்சி, மரங்கள், மலைகள் போன்றவற்றை காணும் போது மன அழுத்தம் குறைவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் தனது புதிய ஆய்வின் மூலம் சூரிய ஒளி உடலில் படும் பொது மன ரம்மியம் அடைவதாக தெரிவித்துள்ளது.

சூரிய ஒளியினால் கிடைக்கும் 15 நன்மைகள்:

1. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

2. நல்ல உறக்கம் பெற

3. மூளைச் செயல்பாட்டை அதிகரித்தல்

4. அல்சீமர் நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது

5. தோல் குறைபாடுகளை குணப்படுத்தும்

6. குழந்தைகளின் வளர்ச்சிக்க உதவுகிறது

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

8. புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும்

9. டைப் 2 வகை நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கும்

10. நம் மனநிலையை மேம்படுத்துகிறது

11. உடல் பருமனைக் குறைக்க உதவும்

12. எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்

13. கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

14. மன அழுத்தத்தை எதிர்த்து போராடும்

15. பருவகால பாதிப்புக் கோளாறுகளை எதிர்த்து போராடும்

தோப்புக்கரணம் போடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !

March 30, 2022 0
தோப்புக்கரணம் போடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !

                                              

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் மூலாதாரத்தில் – சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

தோப்புக்கரணம் போடும்போது மூளையின் நியூரான் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி அடையும். அதனால், மனம் ஒருமுகப்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கும்.

உடல், புத்துணர்ச்சி பெறும். மன அழுத்தம், மனச் சோர்வு விலகும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளை நரம்புகள் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்கள் நரம்பியல் வல்லுநர்கள்.

மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமாகத் தூண்டப்படுகிறது. மேலும், மூளைக்குச் செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் நரம்புகள் வலுப்பெறுகின்றன.


தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.!

March 30, 2022 0
தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.!

தொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம். நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். குறிப்பாக, இன்றைக்கு கொரானா வைரஸ் தாக்குதல் பாதுகாப்பிற்காக அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம்

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணி நேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70 வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும். .சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும் ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது.மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால் பாத வெடிப்பு வலி மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும் நடக்க இயலாதோறும் பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன் இரத்த அழுத்தம் இதய நோய் ஆஸ்துமா கண் நோய்கள் மூக்கடைப்பு தூக்கமின்மை மூட்டுவலி முதுகுவலி மன இறுக்கம் போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.-

எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள துளசி !!

March 30, 2022 0
எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள துளசி !!

துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.


துளசியானது திருத்துளாய், துளவு, அரி, இராம துளசி, குல்லை, வனம், விருந்தம், துழாய், துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

துளசியில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டு துளசி பல்வேறு வகைகள் உள்ளது.

துளசியின் இலை, விதை போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. துளசி இலைச் சாற்றில் தேன், இஞ்சி கலந்து ஒரு தேக்கரண்டி குடித்து வரலாம்.

துளசி உடலிற்கு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. துளசி இலையைப் ஊற வைத்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

பேன், பொடுகு தொல்லை நீங்க துளசி சாறு எடுத்து அதனுடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

Tuesday 29 March 2022

மூளைக்கு மிகுதியான சக்தி தரும் மாதுளையின் நன்மைகள்.!

March 29, 2022 0
மூளைக்கு மிகுதியான சக்தி தரும் மாதுளையின் நன்மைகள்.!
கொரோனா தொற்றுநோய்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், உடலின் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமையில் மட்டுமே கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்றுநோயை வெல்ல முடியும்.

மாதுளை ஆரோக்கியத்தின் பொக்கிஷம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மக்கள் பல்வேறு பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத பொருட்களை உட்கொள்கின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, மாதுளை அத்தகைய ஒரு பழமாகும், இது ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறது. மாதுளையின் நன்மைகளைப் பற்றி நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

மாதுளையின் நன்மைகள்

மாதுளை சாப்பிடுவதால் வயிற்றின் ஜீரண சக்தி பலப்படும். வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறார்கள்.

உடல் தசைகளை வலிமைக்கும்

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மாதுளையில் பல ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. மாதுளையில் புரதம், வைட்டமின் சி, நார்ச்சத்து, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. மாதுளையை உட்கொள்வதால் உடல் தசைகள் வலுவடைந்து கண்பார்வை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்

நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதற்கு மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால், உடலில் இரத்த அழுத்தம் குணமாகும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் லோ பிபி, ஹை பிபி பிரச்னையும் வெகுவாகப் சரியாகிவிடும்.

உடல் பருமனில் இருந்து விடுபட

மாதுளையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோயிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. அதாவது, மாதுளையை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு, சர்க்கரை நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.